திரையுலகில் கால் பதிக்கும் குஷ்பு மகள் ?

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பூ. கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த குஷ்பு தற்போது சினிமா தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் வருகிறார்.

Avantika, Ananthika, Sundar.C, Kushboo, 19th Sep 2022

நடிகை குஷ்பு தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குஷ்புவின் மகள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டதாகவும் விரைவில் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் குஷ்பூ – சுந்தர் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர். குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிக்க இருப்பதை அவர் லண்டனில் நடிப்பு பயிற்சி முடித்து சென்னை திரும்பியுள்ளார். விரைவில் அவர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கிறார். அதேபோல் குஷ்புவின் இளைய மகள் அனந்திகாவும் விரைவில் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Avantika, Ananthika, Sundar.C, Kushboo, 19th Sep 2022

இந்த நிலையில் குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவந்திகாவின் முடி நிறம் மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நிலையில் ஹீரோயினுக்கு அவர் தயாராகி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

adbanner