ஏஆர் ரகுமானின் அடுத்த இசை நிகழ்ச்சி மலேசியாவில் – டிக்கெட் விற்பனையில் சாதனை!

AR Rahuman, 19th Sep 2022

உலகம் முழுவதும் சுற்றி இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறார் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏஆர் ரகுமான் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார் என்பதும் அந்த இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் அடுத்த இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற உள்ளது. மலேசியாவில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சிக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக சற்றுமுன் முன்பதிவு தொடங்கிய நிலையில் 11 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து சாதனை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு மலேசிய மக்கள் மிகப்பெரிய ஆதரவு தருவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

AR Rahuman, 19th Sep 2022

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் ‘கோலாலம்பூர் புக்ரித் ஜலீஸ் ஸ்டேடியம்’ சுமார் 60 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது என்று கூறப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.