குளிக்கும் கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி !!

பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து குளிக்கும் கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை தனது காதலனுக்கு அனுப்பிய கல்லூரி ஹாஸ்டல் மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து பிரபல நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் அறிவுரை கூறியுள்ளார்.

Sonu, 18th Sep 2022

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவிகள் தங்கும் ஹாஸ்டலில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து அதனை தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார்.

Sonu, 18th Sep 2022

இந்த வீடியோக்களில் ஒரு சில சமூக வலைதளங்களில் வைரலானதால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட மாணவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.இது கடந்த சில நாட்களாக நடந்துள்ள நிலையில் 60க்கும் மேற்பட்ட குளிக்கும் பெண்களின் வீடியோவை தனது காதலருக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பிரபல நடிகர் சோனு சூட் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் நம் சகோதரிகளுக்கு நாம் துணையாக நிற்க வேண்டிய நேரம் இது என்றும் அப்படி செய்தால் தான் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இது சோதனையான காலம்தான் என்பதால் அனைவரும் பொருப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

adbanner