பிறந்த நாள் கேக்கை பார்த்ததும் அலறியடித்து ஓடிய ‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா!!

Shurithika, Tharshan, 18th Sep 2022

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஜாலியாகவும் அதே நேரத்தில் சிறப்பாகவும் சமையல் செய்து விளையாடிய ஸ்ருதிகா டைட்டில் பட்டத்தை வென்றார் என்பதும், இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 டைட்டில் வின்னர் ஸ்ருதிகா சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய போது ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்த பிறந்த நாளுக்காக தர்ஷன் சிறப்பு கேக் ஒன்றை ஆர்டர் செய்து வரவழைத்திருந்த நிலையில் அந்த கேக்கை பார்த்தவுடன் ஸ்ருதிகா அலறியடித்து ஓடினார்.

Shurithika, Tharshan, 18th Sep 2022

அதற்கு காரணம் அந்த கேக்கில் பல்லிகள் போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது தான். எனக்கு பல்லிகள் என்றால் மிகுந்த பயம் என்றும் தன்னை பழி வாங்குவதற்காகவே இப்படிப்பட்ட கேக்கை தர்ஷன் ஆர்டர் செய்திருக்கிறார் என்றும் செல்லமாக ஸ்ருதிகா திட்டிய நிலையில், புகழ் அந்த பல்லிகளை எல்லாம் எடுத்துவிட்ட பிறகு ஸ்ருதிகா அந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இது குறித்த வீடியோவை ஸ்ருதிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Shurithika, Tharshan, 18th Sep 2022
adbanner