நடிகர் அஜித் வட இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல்!!

Ajithkumar, AK 61, 18th Sep 2022

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ’ஏகே 61’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அஜித் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பைக் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

Ajithkumar, AK 61, 18th Sep 2022

இந்த நிலையில் தற்போது அஜித், வட இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விரைவில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பாங்காங் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் இதில் அஜித், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் விரைவில் சென்னையில் இருந்து பாங்காக் நோக்கி படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

adbanner