பல கேரக்டர்களில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 குறித்த தகவல்!!

3டி டெக்னாலஜியில் உருவாகும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

Suriya , Suriya 42, Devisriprasad, Thisha pathani, 18th Sep 2022

இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய ஐந்து கேரக்டர்களில் சூர்யா நடித்து வருவதாகவும் மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ’சூர்யா 42’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோவாவில் நடைபெறவிருப்பதாகவும், அங்கு பிரம்மாண்டமான செட் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் செப்டம்பர் இறுதி வாரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Suriya , Suriya 42, Devisriprasad, Thisha pathani, 18th Sep 2022

மேலும் இந்த படப்பிடிப்பில் சூர்யா மோதும் சுமார் 200 ஸ்டண்ட் கலைஞர்களுடன் பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக சூர்யா ஐந்து வேடங்களில் நடிக்கும் இந்த படம் தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வருகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷா யூசூப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.