சீரியலில் கர்ப்பமான நடிகை நிஜத்திலும் கர்ப்பம்: ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் பிரபலமானது ’பாண்டவர் இல்லம்’ என்பதும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த தொடர் தான் முதல் இடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.’பாண்டவர் இல்லம்’ சீரியலில் கர்ப்பமாக இருப்பதாக நடித்து வரும் நடிகை ஒருவர் நிஜத்திலும் கர்ப்பமாக உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Anu, Pandavar Illam, 18th Sep 2022

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மெல்ல திறந்தது கதவு’ உள்பட பல சீரியல்களில் நடித்து தற்போது பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அனு.

Anu, Pandavar Illam, 18th Sep 2022

இந்தநிலையில் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் தற்போது கர்ப்பிணியாக ரோஷினி கேரக்டரில் நடித்து வரும் அனு, தற்போது உண்மையாகவே கர்ப்பமாகியுள்ளார். இது குறித்த சந்தோஷமான செய்தியை அவர் தனது கணவருடன் கூடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் கர்ப்பமாகி உள்ள நடிகை அனுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தான் கர்ப்பமானது குறித்து அனு கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது இனிய கணவருக்கு அவரது வாழ்க்கையில் சிறந்த பரிசை வழங்கப் போகிறேன். ஒரு தேவதையை என் வயிற்றில் கொஞ்ச நாளாக ரகசியமாக வைத்திருக்கிறேன். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் உற்சாகத்தையும் அதிர்ஷ்டத்தையும் இன்னும் சில மாதங்களில் பெற இருக்கின்றேன். நான் இதற்கு முன்பு இந்த மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை. நாங்கள் பெற்றோராக மாறா போகிறோம். கடவுளின் கிருபையால் 4 மாத கர்ப்பமாக இருக்கின்றேன்’ என்று பதிவு செய்துள்ளார்.