பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து மணிரத்னம் கூறும் தகவல்!!

Ponniyin Selvan, Mani Ratnam, Vikram, Karthy, Jeyamravi, Ishwaryarai, Thrisha, Vikrampirabu, Pirabu, Jeyaram, Ishwarya Ludshmi, Sarathkumar, Partheepan, Pirakashraj, Rahuman, 18th Sep 2022

வரும் 30ஆம் தேதி பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் 9 மாதங்களில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Ponniyin Selvan, Mani Ratnam, Vikram, Karthy, Jeyamravi, Ishwaryarai, Thrisha, Vikrampirabu, Pirabu, Jeyaram, Ishwarya Ludshmi, Sarathkumar, Partheepan, Pirakashraj, Rahuman,  18th Sep 2022

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் மட்டுமே வருகின்ற 30 தேதி வெளியாகயிருப்பதுடன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே தற்போது முடிவடைந்து உள்ளது என்றும் அடுத்த ஆண்டு இரண்டாம் பாகத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

adbanner