அவனை பார்த்தால் பளாரென்று கன்னத்தில் அறைந்து விடுவேன் – வனிதா விஜயகுமார் சொன்னது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பதும், அவரது பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவனை பார்த்தால் பளாரென்று கன்னத்தில் அறைந்து விடுவேன், என்று விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vanitha Viyajakumar, Srihari, 18th Sep 2022

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின் போது அவரது மகன் ஸ்ரீஹரியின் சமூக வலைதள பதிவு ஒன்றுக்கு கருத்து கூறிய போது ‘அவன் ஆளு தான் வளர்ந்திருக்கான், அறிவு வளரவில்லை’ என்று கூறியுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆகாஷின் மகன் ஸ்ரீஹரி தனது சமூக வலைத்தளத்தில் ’நான் வனிதாவின் பையன் இல்லை, ஆகாஷ் பையன் என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு தான் வனிதா மேற்கண்டவாறு விமர்சனம் செய்திருந்தார். மேலும் அவனை பார்த்தால் பளாரென்று கன்னத்தில் அறைந்து விடுவேன், அவன் ஆளு தான் வளர்ந்திருக்கான், அறிவு வளரவில்லை என்றும், ரெண்டும் லூசு தான் என்றும், அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

adbanner