நடிகை மீனாவின் பிறந்தநாளுக்கு அவருக்கு விருந்து வைத்த பிரபல நடிகை – வைரல் புகைப்படங்கள்

நடிகை மீனாவை பிரபல நடிகை ஒருவர் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Meena, Rathika 18th Sep 2022

சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து மீனாவுக்கும் அவரது மகளுக்கும் ஆறுதல் சொல்ல அவருடைய திரையுலக தோழிகள் குவிந்து ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மீனா தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கணவர் இழப்பில் இருந்து அவர் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக இந்த பிறந்த நாளை அவரது திரையுலக தோழிகள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர். இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தோழிகள் எடுத்த முயற்சியால் மீனா இந்த பிறந்தநாள் விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.

Meena, Rathika 18th Sep 2022

இந்த நிலையில் மீனா பிறந்தநாளை அடுத்து பிரபல நடிகை ராதிகா ரெஸ்டாரண்டுக்கு அவரை அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்து குறித்த புகைப்படங்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்து கூறியிருப்பதாவது: எப்போதும் எனக்காக சிறந்ததை நினைக்கும் அழகான நண்பர்களை கொண்டிருப்பதற்கும் என்னை மகிழ்ச்சியாக பார்க்க தங்களால் முடிந்ததை செய்த எனது நண்பர்களுக்கும் நன்றி என பதிவு செய்துள்ளார்.