விக்னேஷ் சிவனை அசர வைத்த நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இன்றைய பிறந்த நாளில் விக்னேஷ் சிவனை அவருடைய மனைவி நயன்தாரா அசரவைத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Vignesh Sivan, Nayanthara, 18th Sep 2022

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான விக்னேஷ் சிவன், விரைவில் அஜித் நடிக்கவிருக்கும் ’ஏகே 62’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் அவரை துபாய்க்கு அழைத்துச் சென்ற நயன்தாரா, அங்கு அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் காலிபா என்ற இடத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பதிவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து கூறியதாவது: ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்த நாளாக எனக்கு இன்று அமைந்துள்ளது. என் தங்கமான மனைவியின் அற்புதமான ஆச்சரியம், பூர்ஜ் கஃலிபாவுக்கு கீழே என் அன்பான குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடினேன். இதைவிட சிறப்பாக வேறு பிறந்தநாள் கொண்டாட முடியாது.

ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இறைவன் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக நான் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுடன் நயன்தாரா மற்றும் அவருடைய குடும்பத்தினரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

Vignesh Sivan, Nayanthara, 18th Sep 2022
adbanner