‘
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் முதல் நாள் இந்த படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்’விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவான முதல் படமாகும். இந்த படத்தின் கதையை கூறுவதற்கு முன்னர் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை கவுதம் மேனன் தன்னிடம் கூறியதாகவும் அந்த படத்திற்கு ‘சுறா’ என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் சிம்பு தனது பேட்டியில் தெரிவித்தார்.
ஆனால் தற்போதைக்கு ஆக்சன் படம் வேண்டாம், ஒரு ரொமான்ஸ் படம் பண்ணலாம் என்று நான் கவுதம் மேனனிடம் கூறியதை அடுத்து அவர் ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தின் கதையை தன்னிடம் கூறினார் என்றும் அந்த படம்தான் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படமாக உருவானது என்றும் சிம்பு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சுறா’ என்ற திரைப்படத்தை ரிஜக்ட் செய்துவிட்டு இந்த படத்தை தேர்வு செய்தேன் என சிம்பு நடித்த சூப்பர் ஹிட் படம் குறித்த தகவலை அவர் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
