‘நானே வருவேன்’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்

’நானே வருவேன்’ திரைப்படம் தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது இந்த டீசரில் இருந்து அண்ணன் தம்பி தனுஷ் கேரக்டர்களுக்கு இடையே நடைபெறும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

Yuvan shankar raja, Kalaipuli S Thanu, Selvaragavan, Danush, Nane Varuven, 17th Sep 2022

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்து உள்ளதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என்றும் அதாவது 135 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இந்த படம் 29-ஆம் தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 29ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Yuvan shankar raja, Kalaipuli S Thanu, Selvaragavan, Danush, Nane Varuven, 17th Sep 2022

கதாநாயகன் வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

adbanner