தளபதி படப்பிடிப்பு தளத்தின் அருகே சூப்பர் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு: இரண்டு மாஸ் நடிகர்களும் சந்திப்பார்களா?

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படப்பிடிப்பு நடைபெறும் அதே படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Vijay, Mahesh Babu, Varishu, Vamsi, Thilraji 17th Sep 2022

தளபதி விஜய் உள்பட பலர் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’ . இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இங்கு இந்த படத்தின் ஃபேமிலி காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் அதே பகுதியில் மகேஷ்பாபுவின் 28வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் இருவரும் இணைந்து எடுக்கும் புகைப்படம் இணைய தளங்களை ஸ்தம்பிக்க வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு மாஸ் நடிகர்களும் சந்திப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Vijay, Mahesh Babu, Varishu, Vamsi, Thilraji 17th Sep 2022