நடிகர் அஜித்தை பின்தொடர்ந்து சென்ற ரசிகர்கள்!!

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர் அங்கு உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் அஜீத்தின் பைக் பயணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajithkumar, 17th Sep 2022

இந்த நிலையில் அஜித் பைக் பயணம் செய்வதை அறிந்த அந்த பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் அவரை பைக்கில் சென்று பார்க்க முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அஜித்தை பார்த்த போது ’உங்களை தான் நாங்கள் மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூற அதற்கு அஜித் ’’நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க’ என்று கேட்க அதற்கு அந்த இளைஞர்கள், சும்மா உங்களை பார்க்க தான் என்று கூறுகிறார்கள். அதன் பிறகு அஜித் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.