’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!!

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதோடு முதல் நாளிலே இந்த படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிக திரையரங்குகளில் தற்போது திரையிடப்பட்டு உள்ளதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Venthu thaninthathu kaadu , Simbu 17th Sep 2022

இந்த நிலையில் ஒரு சில விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து உள்ளதால் இந்த படம் நிச்சயம் சிம்பு மற்றும் கவுதம் மேனனுக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இந்த படம் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகையை அமேசான் நிறுவனம் கொடுத்து ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

adbanner