ஆயிஷாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? – வைரல் புகைப்படம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’சத்யா’சீரியலில் ஆண் போன்று தைரியமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் கேரக்டரில் நடித்துள்ள சத்யா ஆயிஷாவுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதுடன் இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பி வருகிறது.

Ayesha, sathya, 15th Sep 2022

இந்த நிலையில் சீரியல் நடிகை ஆயிஷா திடீரென நெற்றியில் மற்றும் நெற்றி வகிட்டில் குங்குமம் பொட்டு வைத்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்து விட்டதா? என குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து பலர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேள்வியை எழுப்பிய நிலையில் அவர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். ’அது ஒரு போட்டோஷுட் புகைப்படம் என்றும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version