கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்றும் இந்த படம் நிச்சயம் சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவருக்குமே ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு படம்’ ரிலீஸ் ஆனதையடுத்து கெளதம் மேனன் அவருடைய அடுத்த படமான ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை முடிப்பதில் அவர் தீவிரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ அவரது அடுத்த படமாக வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் வெளியான லிங்குசாமியின் ’தி வாரியர்’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் மற்றும் ராம் பொத்தினேனி இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.