வெந்து தணிந்தது காடு படம் வெளியாவதில் உண்டான சிக்கல் தீர்க்கப்பட்டது?

கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’ என்பதும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே. ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களை தொடர்ந்து கௌதம் மேனன் – சிம்பு – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக உருவாகும் படமாக ‘வெந்து தணிந்தது காடு’ அமைந்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி உள்ளநிலையில், நாளை அதிகாலை 5 மணிக்கு முதல் நாள் காட்சியுடன் இப்படம் ரீலிஸாக இருக்கிறது. தமிழ் முழுவதும் ஹவுஸ்புல் ஆக படமும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் கவுதம் மேனன் சூப்பர்ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க முன்பணம் பெற்ற அதே கதையை வெந்து தணிந்தது காடு என படமாக எடுத்துள்ளதாக ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குநர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே தற்போது இயக்குநர் கவுதம் சமரசம் பேச்சப்பட்டு வாங்கிய ரூ. 2.40 கோடி முன்பணத்தை அடுத்த படம் இயக்கும் முன் வழங்கி விடுவதாக கவுதம் மேனன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருக்கிறதாம்.

vendhu thanindhathu kaadu