மாமியாரின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் போட்ட அழகிய பதிவு!!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார் என்பதும், திருமணத்திற்கு பின்னர் தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று வந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஹனிமூனை முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள வினேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் உள்ளார்.

Vignesh Sivan, Nayanthara, Omana Sooriyan, 14th Sep 2022

இந்த நிலையில் நயன்தாராவின் அம்மா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார்.இந்தநிலையில் விக்னேஷ் சிவன் அவருக்கு தனது வாழ்த்துக்களை கூறி அவருடைய தலையில் அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஓமன குரியன். என்னுடைய இன்னொரு அம்மா, நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண். எப்போதும் தூய்மையான ஆன்மாவை கொண்டுள்ள ஒரு அழகான இதயத்தை கொண்டவர். அவருக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

adbanner