கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’ என்பதும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே. ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களை தொடர்ந்து கௌதம் மேனன் – சிம்பு – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக உருவாகும் படமாக ‘வெந்து தணிந்தது காடு’ அமைந்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி உள்ளநிலையில், நாளை அதிகாலை 5 மணிக்கு முதல் நாள் காட்சியுடன் இப்படம் ரீலிஸாக இருக்கிறது. தமிழ் முழுவதும் ஹவுஸ்புல் ஆக படமும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ரூ. 15 கோடி வரை இப்படம் வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 10 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
