Bindu Madhavi 13–09–2022
Bindu Madhavi – 13th September 2022 – உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தது என்னவோ சீசன் ஒன்றுதான். பிக் பாஸ் சீசன் ஒன்றை தொடர்ந்து நடைபெற்ற அனைத்து சீசன்களும் எதோ ஒருவகையில் ரசிகர்களுக்கு சற்றே சலிப்பை கொடுத்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நடிகை பிந்து மாதவி. வைல்ட் கார்டு என்ட்ரியா உள்ளே வந்தாலும் குறிப்பிடத்தக்க அளவு ரசிகர்களை கவர்ந்தவர் பிந்து மாதவி. மேலும் இறுதி போட்டி வரை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிந்து மாதவி தெலுங்கில் பிக்பாஸ் நொன் ஸ்டாப் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை வென்ற அவர் பிக்பாஸ் Non Stop டைட்டிலை வென்றார்.