இதுவரை யாருமே படப்பிடிப்புக்கு செல்லாத இடத்தில் தனுஷின் அடுத்த படக்குழு

தனுஷ் நடிக்கவிருக்கும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் லொகேஷன் தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ’கேப்டன் மில்லர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டது.

Selvaragavan, Keerthysuresh, Arun Matheshwaran, Captain Millor, Jiviprakash, Piriyanka Mohan, Danush, 13 th Sep 2022

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுவரை தமிழ் சினிமா படப்பிடிப்பு நடைபெறாத தென்காசி, குற்றாலம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே செம லொகேஷனில் தனுஷின் அடுத்த படமான ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் – இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் தனுஷின் வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

adbanner