பிக் பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக களமிறங்கும் திரைப்படம்

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜிவி 2’ என்ற திரைப் படத்தில் நடித்திருந்த நடிகர் வெற்றி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெகதீசன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பக்ரீத், இரவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetti, Jeyamohan,Sivani, 13th Sep 2022

இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நாயகியாகவும் மேலும் முக்கிய கேரக்டர்களில் மன்சூரலிகான், சந்தானபாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் வெற்றி ஒரு வீடியோ கேம் டிசைனராக நடிக்க இருப்பதாகவும் அவர் கற்பனை மூலம் உருவாக்கிய கேரக்டர் நிஜமாகவே பேயாக தோன்றியதால் ஏற்படும் திகில் அனுபவம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

ஒரே இரவில் நடைபெறும் வகையிலான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்திற்கு இசையமைத்த அரோல் கரோலி இசையமைக்கின்றார்.

adbanner