‘வேட்டையாடு விளையாடு 2’ “படத்தின் கதைக்களம் இதுதானா?

’வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடந்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் ஆடியோ விழாவில் ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் கமல்ஹாசனிடம் அந்த கதையை தருவோம் என்றும் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார்.

Veddaiyadu Vilayadu 2, KamalHasaan, Jeyamohan, Gowtham menon, 12th Sep 2022

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனின் கேரக்டர் இந்த படத்தின் கதைப்படி கமல்ஹாசன் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில் காவல்துறை அவரை மீண்டும் ஒரு வழக்கில் ஈடுபட கோரிக்கை விடுப்பதாகவும், அந்த கோரிக்கையை ஏற்று அவர் ஒரு முக்கிய வழக்கை விசாரணை செய்வதுதான் படத்தின் ஒன்லைன் கதை என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தில் கமலஹாசன் ஓய்வுபெற்ற போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் முதல் பாகத்தில் கமல் ஜோடியாக ஜோதிகா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

adbanner