‘ஆர்.சி 15’ படப்பிடிப்பு அனுபவம், எஸ் ஜே சூர்யா சொன்ன தகவல்

தமன் இசையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்.சி 15’. ராம்சரண் தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Aniruth, Shankar. Ramsaran, S.J Surya, Kiyara Athvan, 12th Sep 2022

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ’ஆர்.சி 15’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் போது படப்பிடிப்பை எட்டி பார்த்தபோதும் சரி, ‘நண்பன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் போதும் சரி, தற்போது ’ஆர்.சி 15’ படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கும் போதும் சரி, நான் ஷங்கர் அவர்களிடம் கவனித்தது ஒன்றே ஒன்றுதான். அதே கட்டளை, அதே எனர்ஜி, அதே ஆற்றலை அப்போது பார்த்தது போல் இன்றும் அவரிடம் பார்க்கிறேன். ஷங்கர் அவர்களுடன் மீண்டும் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.