தளபதி விஜய்யை அணுகிய பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் பிலிம்ஸ் என்பதும் இதன் நிறுவனர் ஆர்பி சவுத்ரி பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் பல படங்களில் நடித்திருக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் நூறாவது படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

RP Sowthri, Vijay, Jeeva 12th Sep 2022

இந்த நிலையில் ஆர்பி சவுத்ரி மகனும் நடிகருமான ஜீவா சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி செளத்ரியை சமீபத்தில் விஜய் சந்தித்ததாகவும், இந்நிறுவனத்தின் நூறாவது படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் நூறாவது படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும், இந்த படத்தில் விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் தான் சம்பளம் இன்றி நடித்துக் கொடுப்பதாக தனது தந்தையிடம் கூறியதாகவும் ஜீவா தெரிவித்துள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் நூறாவது படத்தில் விஜய் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

adbanner