‘விக்ரம்’ படத்தில் காணாமல் போன நடிகை காயத்திரியின் தலை இதுதான் – வைரல் பதிவு

’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 100 நாட்கள் இந்த படம் திரையரங்குகளில் ஓடி சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இதனையடுத்து ’விக்ரம்’ திரைப்படத்தின் 100வது நாளில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

Gayaththiri, KamalHaasan, Vikram, 12th Sep 2022

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தை அடுத்து இந்த படத்தில் பகத் பாசிலின் காதலி கேரக்டரில் நடித்திருந்த காயத்ரி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் இறப்பது போல் காட்சி எடுக்கப்பட்டால் அடுத்ததாக கண்விழித்து சிரிப்பது போன்ற ஒரு காட்சியும் கூடுதலாக எடுப்பது வழக்கமானது. ஏனெனில் அந்த நடிகர் உயிருடன் உள்ளார், இறப்பது போல் எடுக்கப்பட்டது நடிப்பு தான் என்பதை உலகிற்கு சொல்வதற்காகவே அவ்வாறு ஒரு காட்சி எடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் ’விக்ரம்’ திரைப்படத்தில் நான் இறந்த காட்சியை படமாக்கியபின், கூடுதலாக நான் சிரிக்கும் காட்சியை எடுக்க மறந்து விட்டோம். காரணம் நேரமில்லை என்பதுதான். இந்த நிலையில் புதுமையாக செய்வதற்காக ஒரு புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டோம். எல்லோரும் உங்கள் தலை எங்கே எனக் கேள்வி கேட்ட நிலையில் அந்த தலை இதோ இருக்கிறது பாருங்கள் என தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

adbanner