படப்பிடிப்பு முடியும் முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆகிவிட்ட ‘வாரிசு’

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’ . விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay, Reshimika Manthana, vamsi, Thiraji,Thaman, 12th Sep 2022

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாகவும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 60 கோடி கொடுத்து வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்த படத்தின் ஆடியோ உரிமை 10 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது.

மேலும் ‘வாரிசு’ திரைப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை 32 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிந்தி டப்பிங் உரிமை 32 கோடி வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே படப்பிடிப்பு முடியும் முன்பே இப்படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் தமிழக ரிலீஸ் உரிமை வியாபாரம் நடைபெற வேண்டிய நிலையில் மொத்தம் 250 கோடிக்கும் அதிகமாக இந்த படத்தின் வியாபாரம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.