தொலைக்காட்சி சீரியல் நடிகையின் ரசிகையாக மாறிய நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றுக்கு தான் மிகப்பெரிய ரசிகை என அந்த சீரியலில் நடித்த நடிகைக்கு போன் செய்து பாராட்டியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் நடிகை அனுஷ்காவுக்கு உள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு தமிழ் சீரியலுக்கு ரசிகை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

’ஈரமான ரோஜாவே’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் பவித்ரா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Actor Anushka, Serial Actor Pavithira 12th Sep 2022

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தனக்கு போன் செய்து பாராட்டியதாகவும், முதலில் அனுஷ்கா போன் செய்தபோது பிராங்க் கால் என்று நினைத்ததாகவும், ஆனால் அது உண்மையிலேயே அனுஷ்காவின் கால் என்பதை கேட்டதும் ஆச்சரியமடைந்ததாகவும் பவித்ரா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் அனுஷ்கா இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் தான் பவித்ராவின் ரசிகை என்று கூறியதாகவும் பவித்ரா தன்னுடைய மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

தாமதமான பதிவு, நான் சோர்வாக இருந்தபோது ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது வேற யாரும் இல்லை அனுஷ்கா தான். நமது பாகுபலி நடிகை தேவசேனா தான். இது ஒரு பிராங்க் என்று நினைத்தேன். ஆனால் உண்மையை தெரிந்து கொண்ட பிறகு மிகவும் சந்தோசம் அடைந்தேன்.

‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலை அனுஷ்கா பாராட்டினார் என்பது மிகப்பெரிய பெருமை. அவர் எங்கள் சீரியலை வழக்கமாக பார்ப்பார் என்று கூறினார். அவரிடம் பெற்ற பாராட்டுக்கள் என் இதயத்தில் என்றென்றும் இருக்கும். அவருடைய பாராட்டை கேட்டதும் நான் மேகத்தில் பறந்தேன். அது மட்டும் அல்லாமல் நான் சோர்வாக இருக்கும்போது அனுஷ்காவிடம் இருந்து வந்த அழைப்பை நினைத்து கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

adbanner