ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் இந்தியன் 2 பட மாஸ் தகவல்!

கமல்ஹாசன் நடித்த ’ஹேராம்’ படத்தை அடுத்து நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படம் ’இந்தியன் 2’ என்ற பெருமை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தொடங்கிய நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வருகின்றது. விரைவில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இந்தியன் 2’ படத்தின் ரன்னிங் டைம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் என்று எனும் தகவலை கூறியுள்ளார்.

Shankar, Aniruth, Jeyamohan, Kamal Haasan, Indian 2, ஹே ராம், 11th Sep 2022

ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ’ஹே ராம்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் என்று இருந்த நிலையில் கிட்டத்தட்ட அதே ரன்னிங் டைம் ’இந்தியன் 2’ படமும் இருக்கும் என்று கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

adbanner