தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, மூடநம்பிக்கைகள், மன அழுத்தம் – பிரபல நடிகர் பேட்டி

மனதின் மையம் என்ற அறகட்டளையின் ஒரு அங்கமான நேசம் சேவை மையம் தொடக்க விழா ஈரோட்டில் நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, ‘தற்கொலை என்பது தவிர்க்க வேண்டிய மிகவும் அவசியமான ஒன்று என்றும் தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, மூடநம்பிக்கைகள், மன அழுத்தம் என்றும் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Sathyaraj, 11th Sep 2022

நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டவன் நான் என்றும், முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட் தேர்வு பாதிக்கும் என்றும் நடிகர் சத்யராஜ் கூறினார். படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள் படித்து முன்னேறுவதற்கு நீட்தேர்வு தடையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம் அவர்கள் ஒன்றும் பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், போன்ற புரட்சியாளர்கள் இல்லை என்றும் நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர் என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆனால் நடிகர்களுக்கு நடிப்பு தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் கூறினார். நடிகர்கள் சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ கிடையாது என்றும், நடிகர்களுக்கு சாப்பாடு கொடுங்கள் ஆனால் அவர்கள் தலையில் தூக்கி கொண்டாட வேண்டாம் என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.