புத்தகம் விற்கும் பெண்ணுடன் செல்பி எடுத்த நடிகை.

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிக்கவில்லை. தற்போது பிரபுதேவா நடித்து வரும் ’வினோதன்’ என்ற தமிழ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் தமிழ் பட படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ள வேதிகா காரில் சென்று கொண்டிருக்கும் போது சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் செல்பி எடுத்து அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணிடம் சில புத்தகங்களையும் அவர் வாங்கி உள்ளதாக தெரிகிறது. இது குறித்த வீடியோவை நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.