ரசிகர்களின் கேள்வியால் கடுப்பான சீரியல் நடிகை !!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ஆபீஸ்’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் மதன். இவர் சமீபத்தில் சீரியல் நடிகை ரேஷ்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு சின்னத் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reshma, Mathan, Abi tailor, 11th Sep 2022

இந்நிலையில் மதன் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் தற்போது அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீரியல் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த நிலையில் , ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டதால் கடுப்பானார். இந்த கேள்விக்கு அவர், ‘’எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க.. நான் கர்ப்பமாக இல்லை’ என்று பதில் அளித்ததோடு ’கர்ப்பம் என்பதை ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக்கோடு கேட்டு உள்ளீர்கள்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.