படப்பிடிப்பு தளத்தில் முரண்பட்டுக்கொண்ட அட்லீ மற்றும் விஜய் சேதுபதி?

இயக்குநர் அட்லி பிகில் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஷாருக் கானுடன் இப்படத்தில் நயன்தாரா, அனிருத், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய தமிழ் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் அட்லீக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, அட்லீ எழுதியிருந்த காட்சியில் விஜய் சேதுபதி திருத்தும் ஒன்றை கூறியுள்ளாராம். ஆனால், காட்சியில் எந்த ஒரு திருத்தமும் செய்யமுடியாது என்று அட்லீ கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி காட்சி எழுதியிருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கேரவனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Atlee, Deepika Padukone, Jawan, Vijay Sethupathi, விஜய் சேதுபதி, ஜவான்