அதர்வாவின் ‘ட்ரிகர்’ பட ட்ரெய்லர் !!

செப்டம்பர் 23ஆம் தேதி நடிகர் அதர்வா நடித்த அடுத்த திரைப்படமான ‘ட்ரிகர்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் அதர்வாவின் தந்தையாகவும் முன்னாள் காவல்துறை அதிகாரியாகவும் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஆக்சன் பிரியர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும்.

Trigger, Atharva, Arunpandiyan, Thanja, PS Mithran, Jipran, ThilipMuthrajan, 11th Sep 2022

சென்னை நகரில் திடீர் திடீரென குழந்தைகள் கடத்தப்படும் நிலையில் காவல்துறையில் அண்டர்கவர் பணிபுரியும் அதர்வா, குழந்தைகள் கடத்தல்காரனை கண்டுபிடிக்கும் கதையம்சம் கொண்ட படம் தான் ‘ட்ரிகர்’ என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திலிப் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாகஇருக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மொத்தத்தில் அதர்வாவின் அடுத்த வெற்றிப்படமாக ‘ட்ரிகர்’ இருக்கும் என்று இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.