சோழ ராணி கெட்டப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா !!

சோழநாட்டின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் தனியார் நகைக்கடை விளம்பரம் ஒன்றுக்காக சோழ ராணி போன்ற கெட்டப் போட்டு நயன்தாரா நடித்த விளம்பர புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராணி போல் உடையணிந்து நகைக்கடை விளம்பரத்துக்காக அட்டகாசமாக ராணியின் கெட்டப் போட்டுள்ள நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சோழர்களின் கதையான ’பொன்னியின் செல்வன்’ வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்காமலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சோழ ராணி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nayanthara, Ponnijyin Selvan 11th Sep 2022

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் இப்படி ஒரு விளம்பரம் கொடுத்தால் நன்றாக மக்கள் மத்தியில் ரீச் இருக்கும் என நயன்தாரா தான் அந்த நிறுவனத்திற்கு ஐடியா கொடுத்ததாகவும் இதனை அடுத்து பிரமாண்டமாக போடப்பட்டுள்ள சோழர் கால செட் அமைக்கப்பட்டு இந்த விளம்பர படம் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’பொன்னியின் செல்வன்’ வெளியாகும் நேரத்தில் இந்த விளம்பரமும் வெளியாகும் என்பதால் நயன்தாரா நடித்த இந்த விளம்பரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

adbanner