பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் !!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை தேறி வந்ததாகவும் கூறிய மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்ததாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன இயக்குனர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

Barathiraja, Muthalvar Muka Stalin, 10th Sep 2022

இந்த நிலையில் பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சியாக பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வரின் திடீர் வருகை இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner