டப்பிங் ஆர்டிஸ்டாக களமிறங்கியுள்ளார் பிருந்தா.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா ஒரு பாடகி என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. பாடகியாக இருந்த நிலையில் தற்போது பிருந்தா புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உட்பட ஒரு சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் அந்த பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிருந்தா பாடகியை அடுத்து தற்போது டப்பிங் ஆர்டிஸ்டாக களமிறங்கியுள்ளார் . நேற்று வெளியான ’பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நாயகியான ஆல்யா பட் அவர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தது பிருந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Biruntha, Surya, Karthi, Sivakumar 10th Sep 2022

இதுகுறித்து பிருந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.