சரித்திரப் படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் ஷங்கர் !!

Shankar, Surya, Surya 42, Ponniyinselvan, 10th Sep 2022

தற்போது ராம்சரண் தேஜாவின் ’ஆர்சி 15’ மற்றும் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ ஆகிய படங்களை இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக அவர் இயக்கயிருக்கும் படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடி என்று கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய ’வேள்பாரி’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக திரைக்கதை அமைக்கும் பணியை எம்பி சு வெங்கடேசன் என்று தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூ.1000 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா நாயகனாக ’வேள்பாரி’ கேரக்டரில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படம் தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’பொன்னியின்’ செல்வன் என்ற சரித்திர திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ’சூர்யா 42’ திரைப்படமும் சரித்திர படம் என்று நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படமும் சரித்திர படம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.