அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் CS.

தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்த முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS. ’விக்ரம் வேதா’ இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘ஓர் இரவு’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. ’விக்ரம் வேதா’ மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது. இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். கண்ணம்மா மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது. மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் பல திரைப்படங்கள் அவருக்கு தொடர் வெற்றிகளை பெற்று தந்ததுடன், சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

Sam CS, Rockettri, Vikram Vedha, oor Iravu, 10th Sep 2022

இசையமைப்பாளர் சாம் CS க்கு பாலிவுட்டிலிருந்து பல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சாம் CS. மேலும் ’ராக்கெட்டரி’ வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ’விக்ரம் வேதா’ படத்தின் இந்திப்பதிப்பு டிரெய்லர் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.