பிரபல தமிழ் பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை தூக்கில் தொங்கி தற்கொலை!!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மகள் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ ’பிசாசு’ ’சார்பட்டா பரம்பரை’ உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை (வயது 28) திடீரென நேற்று இரவு தனது வீட்டில் தூக்கில்தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

Thurikai, Kabilan, 10th Sep 2022

தற்கொலை செய்து கொண்ட தூரிகை பிரபல ஆங்கில ஊடகத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பதும் அவரே இணையத்தில் ஒரு சொந்த இதழை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல திரைப்படங்களில் அவர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும், இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரபல தமிழ் படலாசிரியரின் மகள் தூரிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

adbanner