சென்னையிலும் எனது துப்பாக்கிச்சூடு பயிற்சி தொடரும் – நடிகை ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்து தமிழ் திரையுலகிலும் ஒரு சில படங்களில் நடித்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ராஜசேகர பாண்டியன் என்பவரிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றுவருகிறார். சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Ramyapandiyan, Rajasekarapandiyan 10th Sep 2022

இந்தப் பதிவில் ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது: எதிர்பாராத விஷயங்கள் நடந்தால் நிச்சயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வார இறுதியில் நான் திருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டேன். தேசிய துப்பாக்கி சுடும் வீரர் ராஜசேகர பாண்டியன் அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததற்கும் எனக்கு சில முறைகளை கற்பிப்பித்த அவருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி எனக்கு ஒரு அற்புதமான அனுபவம். இப்போது நான் RPSCன் கவுரவ உறுப்பினர் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. திருச்சியை அடுத்து சென்னையிலும் எனது துப்பாக்கிச்சூடு பயிற்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் ரம்யா பாண்டியனும் அவரை பின்பற்றி துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

adbanner