கோப்ரா வரிசையில் ஆர்யாவின் கேப்டன் – முதல் நாள் வசூல் நிலவரம்

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன்’. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாகியிருந்தது.

மேலும் இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

நேற்று கேப்டன் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் சொல்லும் படியாக இல்லை என்பதால் விமர்சனத்திலும் நல்ல அடி வாங்கியது. படத்தின் வசூலும் செல்லும் படி இல்லை. முதல் நாள் முடிவில் படம் ரூ. 1 முதல் ரூ. 1.5 கோடி வரை தான் வந்துள்ளதாக கூறப்படுகிறது. கோப்ரா வரிசையில் கேப்டன் திரைப்படமும் இணைத்துள்ளதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Arya, Captain, ஆர்யா, கேப்டன்