திரையுலகில் முதன் முதலாக சமந்தா ஏற்று நடிக்கப்போகும் கதாபாத்திரம்

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன் தாரா, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது, தெலுங்கு சினிமா மற்றும் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா தற்போது தமிழ்,தெலுங்கை தாண்டி ஹிந்தியிலும் கால்பதித்துவிட்டார். அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா என தொடர்ந்து மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அமர் கவுசிக் இயக்கி வரும் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள சமந்தா, படத்தில் இளவரசியாகவும், பேயாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம்.

samantha mood