நயனின் அடுத்த பட படப்பிடிப்பும் நிறைவடைந்ததது…

‘தனி ஒருவன்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’காட்பாதர்’. இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Chiranjeevi, Nayanthara, God Father, Thnaioruvan, Mohan Raja, thaman

இந்த நிலையில் நயன்தாரா இந்த படத்தில் சத்யபிரியா ஜெயதேவ் என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.