ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்திய அஜித்

நடிகர் அஜித் தற்போது தனது குழுவினருடன் லடாக் பகுதியில் பைக்கில் சுற்றி வருகிறார், இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கரடுமுரடான சாலைகளில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகள், ஆற்றை கடந்து அவர் பைக் ஓட்டும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.இந்த குழுவில் அவருடன் ’ஏகே 61’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை மஞ்சுவாரியர் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்கில் நினைவிடத்திற்கு அஜித் சென்று அங்கு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அத்துடன் அங்கிருந்த ஒரு சில ராணுவ வீரர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith, AK61, Manchuvariyar, 07th Sep 2022

இந்த நிலையில் அஜீத்தின் ’ஏகேஎ 61’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.