நடிகை அம்ரிதா அய்யரின் யோகா வீடியோ இணையத்தில் வைரல்

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அம்ரிதா அய்யர். இவர் ‘படைவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’காளி’, ‘பிகில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சுந்தர்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’காபி வித் காதல்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அமிர்தா அய்யர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும், சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்க்ள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அமிர்தா அய்யர் ‘இப்படியெல்லாம் வொர்க்-அவுட் செய்ய முடியுமா? என்கின்ற அளவுக்கு சற்று முன் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வந்த வண்ணம் உள்ளன.

adbanner