‘பிரின்ஸ்’ படத்தில் காமெடி வசனங்களில் மீண்டும் திறமையை காட்டியுள்ள ஆனந்த்

‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் சிங்கிள் பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் வசனங்களை விஜய் ஆண்டனி நடித்த ’இந்தியா பாகிஸ்தான்’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் என்பவர் தான் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan, Prince, Sathiyaraj, Mariya, 07th Sep 2022

’இந்தியா-பாகிஸ்தான்’ திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விழுந்து விழுந்து சிரிக்கும் காமெடி வசனங்களை எழுதிய ஆனந்த், ‘பிரின்ஸ்’ படத்திலும் காமெடி வசனங்களை எழுதி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.