அனிருத்தின் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு!!

பிரபல இசையமைப்பாளர் அனிருத், சென்னை மற்றும் கோவையில் மியூசிக் கான்சர்ட் நடத்த இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படட நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் இந்த நிகழ்ச்சி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி கோவையிலும் அக்டோபர் 21ஆம் தேதி சென்னையிலும் அனிருத்தின் ராக் ஸ்டார் மியூசிக் கான்சர்ட் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aniruth, 07th Sep 2022

நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், மில்லியன் கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றவர். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய இசை நிகழ்ச்சி குறித்தான தகவலை பகிர்ந்தார், இது ரசிகர்களை உற்சாக எல்லைக்கு கொண்டு சென்றது மட்டுமன்றி அனிருத்தின் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி மிக உயர்ந்த தரத்தில், சிறந்த காட்சி மற்றும் ஒலி தெளிவுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.